இந்திய மாநிலத் தேர்தலுகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டியை சிபிஜே (CPJ) உருவாக்கியுள்ளது

Voters stand in queues maintaining social distance at a polling station, during the first phase of state elections at Paliganj, in the eastern Indian state of Bihar, Wednesday, Oct. 28, 2020. With an overall declining coronavirus positive trend, Indian authorities decided to hold the first state legislature election since the outbreak of COVID-19. People began voting Wednesday in the country’s third largest state Bihar with of a population of about 122 million people. (AP Photo/Aftab Alam Siddiqui)

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அறிவுரைகள் பல மொழிகளிலும் கிடைக்கின்றன

மார்ச் 8, 2021, நியூயார்க் – The Committee to Protect Journalists, அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறப் போகும் சட்டப் பேரவைத் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஈடுபடப் போகும் எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள், புகைப் படக்கலைஞர்களின் பாதுகாப்பிற்காகத் தேர்தல் பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர்கள்  முதல் பலர் மீதான சட்ட மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும் கைது போன்ற பல வழக்குகள் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு CPJ இந்தியாவில் தேசீய மற்றும் மாநிலத் தேர்தல்களுக்கான நாடு முழுவதற்கும் பொதுவான பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டது. இதன் சமீபத்திய பதிப்பு கொரோனா தொற்றின் போதான உடல் ரீதியான பாதுகாப்பு, எல்லா விதமான வீடியோ தளங்களுக்குமான டிஜிட்டல் பாதுகாப்பு, பாதுகாப்பற்ற இடங்களில் வேலை செய்யும் போது உண்டாகும் ஆபத்துகள் பற்றிய விவரங்கள்  போன்றவற்றையும், இணையதள மிரட்டல்களை சமாளிப்பது பற்றிய அறிவுரைகளையும் கொண்டுள்ளது. இணையதள தொந்தரவுகள், குறி வைக்கப் பட்ட மிரட்டல்கள் தேர்தல்களின் போது அதிகரிக்கிறது என்று CPJ அறிந்து கொண்டிருக்கிறது.

“எந்த ஜனநாயக அமைப்பிலும் தேர்தல்களுக்கு முன்பாகவே மக்களுக்கு விவரங்களைத் தெரிவிப்பது அவசியமாகிறது, அதோடு அவற்றை செய்திகள் மூலமாகவே செய்ய முடியும்” என்று CPJ வின் மூத்த Asia Researcher Aliya Iftikhar சொல்கிறார். “இந்தியாவில் தேர்தல் நிகழ்வுகள், மற்றும் அரசியல் மாற்றங்களைப் பற்றிய செய்திகளை சுதந்திரமாக பத்திரிகையாளர்கள் வெளியிடுவது அவசியமாகிறது. அதற்கு அவர்கள் பாதுகாப்பாக செயல்பட இந்த வழிகாட்டி உதவும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பாதுகாப்பு வழிகாட்டி Assamese, Bengali, English, Hindi, Malayalam, and Tamil போன்ற மொழிகளில் கிடைக்கிறது. அதன் விவரங்கள், CPJ விற்கான உரிய மதிப்பளிப்புடன் பகிரப் படலாம். CPJ Resource center பணிக்கு முந்திய மற்றும் நிகழ்வுக்குப் பிறகான விவரங்களையும் கொண்டிருக்கிறது. உதவி தேவைப் படும் பத்திரிகையாளர்கல் emergencies@cpj.org மூலமாக CPJ Emergencies ஐத் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் சம்பந்தமாக, CPJ நிபுணர்களை நேர்காணல் செய்ய விரும்புவோர் press@cpj.org க்கு மெயில் அனுப்பி தொடர்பு கொள்ளவும்.

CPJ  செய்தித் துறையின் சுதந்திரத்தைக் காக்க, உலக முழுவதும் செயல் படும் ஒரு சுதந்திரமான, லாப நோக்கற்ற நிறுவனம்.

மீடியா தொடர்புகள்:

Bebe Santa-Wood

Communications Associate

Press@cpj.org

+1-212-300-9032

Exit mobile version